முதுகுளத்தூர்,
முதுகுளத்தூரில் பா.ஜனதா கட்சி இளைஞரணி சார்பில் மத்திய பா.ஜனதா அரசின் 9-ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தனியார் திருமண மகாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில இளைஞரணி செயலாளர் டாக்டர் ராம்குமார் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட துணைத்தலைவர் லண்டன் கேசவன், மாநில மகளிர் அணி கலா ராணி, மாநில பட்டியல் அணி பிரிவு செயலாளர் பிரபு, முன்னாள் மாவட்ட தலைவர் முருகவேல், ஒன்றிய இளைஞரணி தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி தலைவர் மோடி முனீஸ் அனைவரையும் வரவேற்றார். மாநில இளைஞரணி செயலாளர் டாக்டர் ராம்குமார் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி செயலாளர் திருமுருகன், ராணுவ அணி பிரிவு ரமேஷ்குமார், வக்கீல் பிரிவு இளையராஜா, ஒன்றிய தலைவர்கள் குமரகுரு, அழகுமலை, ஐயப்பன், கோபாலகிருஷ்ணன், துணைத்தலைவர் கீரனூர் விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞரணி செயலாளர் செல்வநாயகபுரம் கபிலன் நன்றி கூறினார்.