சாலையில் கவிழ்ந்த லாரி
பழனி அருகே சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பழனியில் இருந்து கால்நடை தீவன மூட்டைகளை ஏற்றி கொண்டு லாரி ஒன்று பழைய தாராபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தது. பழனி அருகே கோதமங்கலம் பகுதியில் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது. ஒரு கட்டத்தில் லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து பழனி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.