பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி கற்போர் மையம் தொடக்கம்

குடியாத்தம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி கற்போர் மையம் தொடங்கப்பட்டது.

Update: 2023-09-01 17:36 GMT

குடியாத்தம் நகராட்சி 7-வது வார்டு கஸ்பாவில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் பள்ளிசாரா வயது வந்தோர் கல்வி கற்போர் மைய தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகரமன்ற உறுப்பினர் எம்.கற்பகமூர்த்தி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஜி.பிரியா வரவேற்றார்

சிறப்பு அழைப்பாளராக வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) டி.வெண்ணிலா, ஆசிரியர் பயிற்றுனர் ஜே.கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்