தூய அடைக்கல அன்னை ஆலய தேர்ப்பவனி

திருவாடானை அருகே தூய அடைக்கல அன்னை ஆலய தேர்ப்பவனி நடந்தது.

Update: 2023-05-21 18:45 GMT

தொண்டி, 

திருவாடானை தாலுகா ஆண்டாவூரணி தூய அடைக்கல அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது.தினமும் நவநாள் ஜெப வழிபாடு நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அருட்தந்தை அந்தோணி மைக்கேல் தலைமையில் நடைபெற்ற திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலியை அருட்தந்தையர்கள் ஞானதாசன், இருதயராஜ், அலெக்ஸிஸ் மனோகர், பிரவீன் அருள் செல்வன் ஆகியோர் நிறைவேற்றினர். அதனைத் தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த சப்பரங்களில் தூய அடைக்கல அன்னை, தூய மிக்கேல் அதிதூதர், தூய செபஸ்தியார் மற்றும் தூய வியாகுல அன்னை ஆகியோர் கிராம வீதிகளில் வலம் வந்து இறைமக்கள், பக்தர்களுக்கு இறை ஆசீர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள், கிராம மக்கள் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதனையொட்டி வாண வேடிக்கை, அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஆண்டாவூரணி கிராமத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்