இயற்கை விவசாய முறையில் கேரட் சாகுபடி - விவசாயி அசத்தல்...!

திருச்சி அருகே இயற்கை விவசாய முறையில் கேரட் சாகுபடி செய்து விவசாயி அசத்தி உள்ளார்.

Update: 2022-07-04 13:57 GMT

துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அமைந்து உள்ளது வடக்குவெளி என்ற கிராம. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் குமார்-லதா தம்பதி. இந்த தம்பதியர் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்படுத்தாமல் இயற்கை விவசாயி நம்மாழ்வார் முறையை பின்பற்றி விவசாயம் செய்து வருகிறார்கள்.

அதிலும் தமிழகத்தில் மலைப் பிரதேசங்களில் மட்டும் விளைவிக்கக்கூடிய கேரட், பீட்ரூட், காலிபிளவர், முட்டைக்கோஸ், ஆப்பிள் ஆகியவற்றை இயற்கை விவசாய முறையில் சாகுபடி செய்து உள்ளனர்.

இதுபற்றி விவசாயி குமார் மற்றும் லதா கூறுகையில்,

தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் மனிதர்களுக்கு இயற்கை விவசாய முறை தான் உகந்தது. தொற்றுநோய்கள் பரவாமல் இருக்க காய்கறிகள் தான் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. அதில், இயற்கையான முறையில் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் இல்லாமல் விளைவிக்கக் கூடிய காய்கறிகளில் மிக அதிக அளவில் சத்துக்கள் உள்ளது.

இந்த உணவை பொதுமக்கள் உட்கொள்வதால் ஆரோக்கியமாகவும், நோய் எதிர்ப்பு சக்தியுடனும் வாழ இயலும். ஒவ்வொரு விவசாயம் இதேபோன்று இயற்கையான முறையில் விவசாயம் செய்ய வேண்டும். மலைப்பகுதியில் விளைவிக்கக்கூடிய கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ் ஆகிய காய்கறிகள் தரைப் பகுதியிலும் விளைவிக்க முடியும் என்பதை இயற்கை விவசாயம் மொழியில் நாங்கள் நிரூபித்துள்ளோம்.

இயற்கை விவசாயத்தால் விளைந்த பொருட்களை துறையூரில் உள்ள உழவர் சந்தையில் உழவர் அட்டை பெற்று விற்பனை செய்து வருகிறோம். இயற்கை விவசாய முறையில் சாகுபடி செய்து வெற்றி பெற்றது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்