ஆவடி ராணுவ தொழிற்சாலையிலிருந்து ஜம்மு காஷ்மீருக்கு ராணுவ சிறப்பு வாகனங்கள்

ஆவடி ராணுவ தொழிற்சாலையில் இருந்து குண்டு துளைக்காத இலகுரக சிறப்பு வாகனங்கள் ஜம்மு காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.;

Update:2024-02-01 05:44 IST
ஆவடி ராணுவ தொழிற்சாலையிலிருந்து ஜம்மு காஷ்மீருக்கு ராணுவ சிறப்பு வாகனங்கள்

ஆவடி,

ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் ராணுவ பணிகளுக்காக குண்டு துளைக்காத இலகு ரக சிறப்பு கவச வாகனங்கள் உள்நாட்டிலேயே தனியார் கார் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது மொத்தம் 35 வாகனங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதில் முதற்கட்டமாக 10 வாகனங்கள் ஆவடியில் உள்ள ராணுவ தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கிருந்து நீண்ட வாகனங்கள் மூலம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரச்சினைக்குரிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த வாகனங்கள் ராணுவ வீரர்களை விரைவாக அழைத்து செல்வதற்கும், ஆபத்தில் சிக்கிய வீரர்களை உடனடியாக மீட்டு செல்வதற்கும் ஏதுவாக இலகு ரக சிறப்பு கவச வாகனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தரை மார்க்கமாகவே ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இந்த வாகனங்கள் எடுத்து செல்லப்படுகிறது. விரைவில் மீதமுள்ள வாகனங்களும் ஆவடியில் உள்ள ராணுவ தொழிற்சாலையில் இருந்து அனுப்பி வைக்கப்படும் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்