ரூ.8 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ.8 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

Update: 2023-10-14 18:03 GMT

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் வேலூர் கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான முருகன் தலைமை தாங்கினார். எஸ்.சி., எஸ்.டி. கோர்ட்டு நீதிபதி சாந்தி முன்னிலை வகித்தார்.

இதில் நில ஆர்ஜித வழக்கு, குடும்பநல வழக்கு, தொழிலாளார் வழக்கு, வாகன விபத்து இழப்பீடு வழக்கு உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கில் தொடர்புடையவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு சமரசம் மூலம் தீர்வு காணப்பட்டது.

இதில் வக்கீல் தேவராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டளில் உள்ள நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இதில் 5,392 வங்கி தொடர்பான வழக்குகள், இதர வழக்குகள் 2,246 என மொத்தம் 7,638 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 514 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. இழப்பீடு தொகையாக ரூ.8 கோடியே 31 லட்சத்து 45 ஆயிரத்து 550 சம்மந்தப்பட்டவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்