லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டரை காவலில் வைக்க உத்தரவு

லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

Update: 2023-06-15 19:59 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

நரிக்குடி இன்ஸ்பெக்டர் ராமநாராயணன் (வயது 50) என்பவர் கோவில் திருவிழா நடத்துவதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கினார். இதுதொடர்பாக விருதுநகர் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ராம நாராயணனை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி பிரீத்தா உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்