நமது அம்மா நாளிதழ் நிறுவனர் பெயரில் இருந்து ஓ.பி.எஸ் பெயர் நீக்கம்...!

நமது அம்மா என்ற அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழின் நிறுவனர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் பெயர் நீக்கப்பட்டுள்ளது.;

Update:2022-06-26 15:27 IST
நமது அம்மா நாளிதழ் நிறுவனர் பெயரில் இருந்து ஓ.பி.எஸ் பெயர் நீக்கம்...!

சென்னை,

அ.தி.மு.க.வை வழிநடத்த ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? என்ற விவாதம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இது தொடர்பாக கடந்த 23-ந் தேதி பொதுக்குழு கூட்டம் களேபரமாக நடந்து முடிந்தது. தற்போது இரு அணிகளாக கட்சி செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழின் நிறுவனர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் பெயர் நீக்கப்பட்டுள்ளது. நிறுவனர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என குறிப்பிடப்பட்டு வந்த நிலையில் தற்போது நிறுவனர் எடப்பாடி பழனிசாமி பெயர் மட்டும் இடம்பெற்றுள்ளது.

நாளிதழில் இருந்து ஓ.பி.எஸ் பெயர் நீக்கப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நமது எம்ஜிஆர் என்ற பெயரில் வெளிவந்த அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ், ஜெயலலிதா மறைவுக்குப்பின் நமது அம்மா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்