பிரதமருக்கு எதிர்ப்பு... பாம்பன் பாலத்தில் கருப்பு பலூன் பறக்க விட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது

தமிழ்நாட்டில் 3 நாள் பயணத்தை முடித்த பிரதமர் மோடி, மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

Update: 2024-01-21 14:49 GMT

ராமேஸ்வரம்,

3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் தமிழ்நாடு வந்தார். பயணத்தின் முதல்நாளில் சென்னையில் நடைபெற்ற கேலோ இந்தியா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பயணத்தின் 2-வது நாளான நேற்று திருச்சி ஸ்ரீரங்கம் சென்றார். அங்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார். இதனை தொடர்ந்து ராமேசுவரம் சென்ற பிரதமர் மோடி ராமநாதசுவாமி கோவிலில் வழிபாடு செய்தார்.

பயணத்தின் 3-வது நாளான இன்று பிரதமர் மோடி ராமேசுவரம் தனுஷ்கோடி அரிச்சல்முனையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் வழிபாடு நடத்தினார். பின்னர், தனுஷ்கோடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை சென்றார். இதையடுத்து, தமிழ்நாட்டில் 3 நாள் பயணத்தை முடித்த பிரதமர் மோடி, மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாம்பன் பாலத்தில் கருப்பு பலூன் பறக்க விட முயன்ற காங்கிரசை சேர்ந்த 12 பேரை போலீசார் கைது செய்தனர். அகில இந்திய மீனவர் காங்கிரசின் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமையில், பாம்பன் சாலை பாலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருப்பு பலூன்களை கையில் வைத்து பறக்கவிட முயன்றபோது, 12 பேரையும் போலீசார் கைது செய்தனர். பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டர், பாம்பன் பாலம் பகுதிக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.Full View

Tags:    

மேலும் செய்திகள்