பொது எதிரி, கொள்கை எதிரி யார் என்பதை எதிர்க்கட்சிகள் உணர்ந்து செயல்படவேண்டும் - கி.வீரமணி

பொது எதிரி, கொள்கை எதிரி யார் என்பதை எதிர்க்கட்சிகள் உணர்ந்து செயல்படவேண்டும் என கி.வீரமணி கூறியுள்ளார்.

Update: 2022-12-09 13:57 GMT

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குஜராத் வெற்றியை வெளிச்சம் போட்டுக் காட்டி, இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை இழந்ததையும், இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததையும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அதை வசதியாக' மறைத்தோ, மறந்தோ.

எதிர்க்கட்சிகள் ஒற்றுமையின்மை அல்லது அவர்களைப் பிரித்தாளும் வித்தைகள் தான் இப்போது ஆர்.எஸ்.எஸின் மூலபலம், மக்கள் பலம் அல்ல. சமூகநீதி, மதச்சார்பின்மை, ஜனநாயகம், நாளும் காணாமற் போகிறது. இவற்றிற்கு விடை கண்டு விடியல் தேட வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர்களின் ஒற்றுமை இதில் முக்கியம். இன்றேல், வரலாறும், நமது எதிர்க்கட்சித் தலைவர்களை ஒருபோதும் மன்னிக்காது.

பொது எதிரி, கொள்கை எதிரி யார் என்பதை எதிர்க்கட்சிகள் உணர்ந்து செயல்படவேண்டும். இவை மட்டும்தான் இலக்காகத் தெரியவேண்டுமே தவிர, பிரதமர் நாற்காலி அல்ல என்ற தெளிவுடன் தங்களது பிரசார உத்திகளை, கொள்கைகளை எதிர்க்கட்சித் தலைவர்கள் அமைத்துக் கொள்ளல் அவசரம், அவசியம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்