வெட்டாற்றில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
வெட்டாற்றில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மெலட்டூர்
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்னதாக இந்த தடுப்பணை கட்டும் பணியை முடிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
தண்ணீர் திறப்பு
விவசாயிகளின் கோரிக்கையின்பேரில் தடுப்பணை கட்டும் பணியை மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாகவே முடிக்க பொதுப்பணித்துறையினர் முடிவு செய்து அதற்கான கட்டுமானப்பணியை இரவு, பகல் பாராமல் தடையின்றி முடித்தனர். இந்தநிலையில் நேற்று வெட்டாற்றில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் வெட்டாற்றில் தடுப்பணை கட்டும் பணியை விரைவாக முடித்து தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுத்த பொதுப்பணித்துறையினருக்கு அப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்து கொண்டனர்.