சின்னாளப்பட்டியில் மறுசுழற்சி மையம் திறப்பு

சின்னாளப்பட்டியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பழைய பொருட்களை பயன்படுத்தும் வகையில் மறுசுழற்சி மையம் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2023-05-21 19:00 GMT

தூய்மை இத்தியா திட்டத்தின் கீழ் பழைய பொருட்களை சேகரித்து, தேவைப்படுவோர் பெற்றுக்கொள்ளும் வகையில் சின்னாளப்பட்டி பேரூராட்சி சார்பில் காந்தி மைதானத்தில் மறுசுழற்சி மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பொதுமக்கள் தங்களது பழைய காலணிகள், புத்தகப்பைகள், நோட்டு புத்தகங்கள், பாட்டில்கள், துணிகள், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தையும் கொண்டு வந்து, அதற்காக தனித்தனியாக வைக்கப்பட்டிருந்த தொட்டிகளில் போட்டனர்.

இந்த பழைய பொருட்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு கண்காட்சி போல் வைக்கப்பட்டிருந்தது. இதில், பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவைப்படும் பொருட்களை, அங்குள்ள பதிவேட்டில் கையொப்பமிட்டு பெற்றுக்கொள்ளலாம். முன்னதாக இந்த மையத்தை பேரூராட்சி தலைவர் பிரதீபா கனகராஜ் மற்றும் கவுன்சிலர்கள் தொடங்கி வைத்தனர். மேலும் மறுசுழற்சி மையத்தில் 30-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்