நடமாடும் ரேஷன் கடை தொடக்கம்

நடமாடும் ரேஷன் கடை தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டார்.

Update: 2023-07-04 19:16 GMT

சோளிங்கர்

நடமாடும் ரேஷன் கடை தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்துக்கு உட்பட்ட விநாயகாபுரம், நாயக்கன்பாளையம் கிராமமக்கள் நீண்ட நாட்களாக இப்பகுதியில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்த நிலையில் நடமாடும் ரேஷன் கடை ஏற்பாடு செய்யப்பட்டது. நடமாடும் ரேஷன் கடை தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய அணி வெங்கடேசன், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக் குழு தலைவர் கலைக்குமார், துணைத் தலைவர் பூங்கொடிஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சோளிங்கர் ஒன்றியக் குழு உறுப்பினர் தலங்கை மாரிமுத்து வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, ஜெகத்ரட்சகன் எம்.பி., ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு நடமாடும் ரேஷன் கடையை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து, குடும்ப அட்டை தாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.

மேலும் கரடிக்குப்பம் பகுதியில் புதிய மின்மாற்றியை தொடங்கி வைத்தனர். ஒன்றிய செயலாளர்கள் சந்திரன், பூரணச்சந்தர், தாசில்தார் ஆனந்தன், வருவாய் ஆய்வாளர் செல்வி, வட்டவழங்கல் அலுவலர் வெங்கடேசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்