சட்ட ஆலோசனை மையம் திறப்பு

ஊட்டியில் சட்ட ஆலோசனை மையம் திறக்கப்பட்டது.

Update: 2023-06-20 20:30 GMT

ஊட்டி

தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலின் பேரில், நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், பாதிக்கப்பட்டோருக்கு இலவச சட்ட உதவிகள் வழங்குவதற்கும், இலவசமாக வழக்குகள் நடத்துவதற்கும் நிரந்தர சட்ட உதவி ஆலோசனை மையத்தை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து ஊட்டி நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் சட்ட ஆலோசனை மையத்தை நீலகிரி மாவட்ட நீதிபதி அப்துல்காதர் தொடங்கி வைத்தார். இந்த சட்ட உதவி மையத்திற்கு தலைமை வக்கீலாக செபாஷ்டியன், துணை வக்கீலாக குணசேகரன், உதவி வக்கீலாக சிந்து ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். நிகழ்ச்சியில் வக்கீல்கள் சங்க தலைவர் மகாதேவன், செயலாளர் சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். நிரந்தர சட்ட பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டு உள்ளதால் பெண்கள், ஏழைகள் ஆகியோர் இலவச சட்ட உதவிக்கு தேவையான வழக்காடிகள் இனிமேல் உரிய இலவச சட்ட உதவியை, திறமை வாய்ந்த வக்கீல்கள் மூலம் பெறுவது நீலகிரி மாவட்டத்தில் உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று ஆணைக்குழுவினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்