ரூ.5.25 லட்சத்தில் சுகாதார வளாகம் திறப்பு

நெடுவயல் கிராமத்தில் ரூ.5.25 லட்சத்தில் சுகாதார வளாகம் திறப்பு விழா நடந்தது.

Update: 2023-05-16 19:00 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் ஒன்றியம் நெடுவயல் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சுகாதார வளாகம் திறப்பு விழா நடந்தது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ் கலந்து கொண்டு, சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார். அதுபோல் ரூ.8.21 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் ஓடை கட்டுவதற்கான பணியை தொடங்கி வைத்தார்

இந்த நிகழ்ச்சிக்கு யூனியன் சேர்மன் சுப்பம்மாள் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, ஊராட்சி மன்ற தலைவர் முப்புடாதி, துணைத் தலைவர் இசக்கிமுத்துராஜ் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சுரேஷ் வரவேற்றார். யூனியன் துணை தலைவர் ஐவேந்திரன் தினேஷ், கடையநல்லூர் நகர செயலாளர் அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்