கடையத்தில் மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணை திறப்பு
கடையத்தில் மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணை திறக்கப்பட்டது.
கடையம்:
கடையம் ராமநதி அணை அடிவாரத்தில் ரூ.5 கோடி மதிப்பில் கெண்டை மீன் குஞ்சுகள் வளர்ப்புக்கான பண்ணை அமைக்கப்பட்டு உள்ளது. இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். கடையத்தில் நடந்த நிகழ்ச்சியில் தென்காசி எம்.எல்.ஏ. பழனி நாடார் கலந்து கொண்டு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட அனைத்து பஞ்சாயத்து கூட்டமைப்பின் தலைவர் டி.கே.பாண்டியன், நெல்லை மீன்வளத்துறை உதவி இயக்குனர் புஸ்ரா சப்னம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கடையம் யூனியன் தலைவர் செல்லம்மாள் முருகேசன், மாவட்ட கவுன்சிலர் சுதா சின்னதம்பி, ஏ.பி.நாடானூர் ஊராட்சி மன்ற தலைவர் அழகுதுரை, காங்கிரஸ் வட்டார தலைவர் முருகன், ஆதிமூலம், ராமச்சந்திரன், மாவட்ட மகளிரணி சேர்மகனி, வட்டார மகளிர் அணி தலைவி சீதாலட்சுமி, சுந்தா, நெல்லை மீன்பீடி துறைமுக உபகோட்ட உதவி பொறியாளர் பாலசுப்பிரமணியன், சிற்றாறு பாசனப்பிரிவு வடிநில உதவி கோட்ட பொறியாளர் ராஜேந்திரன், ராமநதி அணை உதவி பொறியாளர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.