ரூ.72.11 லட்சம் மதிப்பில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

சங்கரன்கோவிலில் ரூ.72.11 லட்சம் மதிப்பில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது.

Update: 2023-08-22 19:00 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் மாவட்ட கைத்தறி துறை சார்பில் விருதுநகர் மாபெரும் கைத்தறி குழுமத் திட்டம் மற்றும் கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் ரூ.72.11 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய சாயச்சாலை கட்டிடம் திறப்பு விழா நடந்தது. இதை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து சங்கரன்கோவிலில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கைத்தறி உதவி இயக்குனர் சங்கரேஸ்வரி தலைமை தாங்கினார். யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், கைத்தறி அலுவலர்கள் சுலோச்சனா, பிரேமா முன்னிலை வகித்தனர். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி, அங்கு செய்யப்படும் பணிகளை பார்வையிட்டு பேசினார்.

இதில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் புனிதா, ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் உதயகுமார், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் அப்பாஸ், நெசவாளரணி துணை அமைப்பாளர் ராஜாஆறுமுகம், மாவட்ட விவசாய அணி தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் மரியலூயிஸ் பாண்டியன், இலக்கிய அணி துணை அமைப்பாளர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, நகர அவைத் தலைவர் முப்பிடாதி, நகர துணைச் செயலாளர் முத்துக்குமார், வார்டு செயலாளர் பழனிசாமி, துணை செயலாளர் மணிகண்டபிரபு, கிளைச் செயலாளர் முத்து ஜீவன் அஜய் மகேஷ் குமார், ஒன்றிய இளைஞரணி முருகையா பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்