காரிமங்கலத்தில் மேற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகம் திறப்பு விழா-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்பு
தர்மபுரி:
காரிமங்கலத்தில் மேற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
தி.மு.க. அலுவலகம் திறப்பு விழா
தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகம் காரிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள செந்தில் பல்பொருள் அங்காடி முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து அடிப்படை வசதிகளுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் தலைமை தாங்கினார்.
தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தடங்கம் சுப்பிரமணி, மாநில தீர்மானக்குழு செயலாளர் கீரை விஸ்வநாதன், மாவட்ட துணை செயலாளர்கள் வக்கீல் ஆ.மணி, ராஜகுமாரி மணிவண்ணன், கிருஷ்ணகுமார், மாவட்ட பொருளாளர் எம்.எம்.முருகன், முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் ராஜேந்திரன், மாநில வர்த்தக பிரிவு துணை செயலாளர் மெடிக்கல் சத்தியமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பி.சி.ஆர்.மனோகரன், சித்தார்த்தன், சென்னகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவர் கே.மனோகரன் வரவேற்றார்.
அமைச்சர் பன்னீர்செல்வம்
விழாவில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு ரிப்பன் கட்டி அலுவலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். பின்னர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோரது உருவப்படங்களுக்கு அமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் இல.கிருஷ்ணன், எம்.வி.டி.கோபால், அடிலம் அன்பழகன், முனியப்பன், பி.கே.அன்பழகன், வேடம்மாள், செங்கண்ணன், ரத்தினவேல், சவுந்தரராசு, சந்திரமோகன், சேட்டு, சக்திவேல், மாது, சிவப்பிரகாசம், நெப்போலியன், சரவணன், முத்துக்குமார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கவுதமன், பேரூராட்சி செயலாளர்கள் பி.கே. முரளி, வெங்கடேசன், முல்லை ரவி, இ.மோகன், கவுதமன், டி.மோகன், ஜெயச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் மோகன், சையத் முர்த்துஜா, லட்சுமணன், தேவேந்திரன், வாசுதேவன், கலைவாணி மற்றும் சார்பு அமைப்பு நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் காரிமங்கலம் பேரூராட்சி செயலாளர் கே.வி.கே. சீனிவாசன் நன்றி கூறினார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.