ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தால் பல இளைஞர்களின் உயிர்கள் இனி பறிபோகாமல் தடுக்க முடியும் - விஜயகாந்த்

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தால் பல இளைஞர்களின் உயிர்கள் இனி பறிபோகாமல் தடுக்க முடியும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

Update: 2022-10-29 15:19 GMT

சென்னை,

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு இளைஞர்கள் பலர் அடிமையாகி பொருளாதார நெருக்கடியை சந்தித்ததோடு உயிரிழப்பு போன்ற சம்பவங்களும் அரங்கேறி வந்தது. தற்போது ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தால் பல இளைஞர்களின் உயிர்கள் இனி பறிபோகாமல் தடுக்க முடியும், என்பதால் தமிழக அரசை பாராட்டுகிறேன் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யவும், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தவும் முடிவு செய்து தமிழக சட்டசபையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இதனை தேமுதிக சார்பில் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு இளைஞர்கள் பலர் அடிமையாகி பொருளாதார நெருக்கடியை சந்தித்ததோடு உயிரிழப்பு போன்ற சம்பவங்களும் அரங்கேறி வந்தது. தற்போது இந்த சட்டத்தால் பல இளைஞர்களின் உயிர்கள் இனி பறிபோகாமல் தடுக்க முடியும் என்பதால் தமிழக அரசை பாராட்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்