பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவருக்கு ஓராண்டு சிறை தண்டனை

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதி்க்கப்பட்டது.;

Update:2022-07-29 23:59 IST

தென்னிலை அருகே உள்ள வடபழனியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி சுகன்யா (வயது 30). இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த சுகன்யாவிடம், தென்னிலை குள்ளம்பாளையத்தை சேர்ந்த கருப்பண்ணன் (40) என்பவர் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து தேவராஜ் தென்னிலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் இது தொடர்பாக அரவக்குறிச்சி கிளை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து வழக்கு சம்பந்தமான முழு விசாரணையும் முடிவடைந்த நிலையில் கடந்த 27-ந்தேதி அரவக்குறிச்சி கிளை நீதிபதி சந்தோசம் இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கினர். இதில், கருப்பண்ணனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்