இரட்டைக்கொலை வழக்கில் ஒருவர் சிக்கினார்

முட்டம் இரட்டைக்கொலை வழக்கில் ஒருவர் சிக்கியுள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-06-21 19:43 GMT

ராஜாக்கமங்கலம்:

முட்டம் இரட்டைக்கொலை வழக்கில் ஒருவர் சிக்கியுள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இரட்டைக்கொலை

குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை போலீஸ் சரகம் முட்டம் பகுதியை சேர்ந்தவர் பவுலின் மேரி (வயது48). இவருடன் தாயார் திரேசம்மாள் (90) வசித்து வந்தார். கடந்த 6-ந் தேதி இரவு பவுலின் மேரி, திரேசம்மாள் ஆகிய இருவரையும் கொலை செய்த மர்ம ஆசாமிகள் அவர்கள் அணிந்திருந்த 15 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த இரட்டைக்கொலையில் துப்பு துலக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கொலையாளிகள் பற்றி தகவல் தருவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் அறிவித்திருந்தார்.

ஒருவர் சிக்கினார்

இந்த இரட்டைக்கொலை நடந்த பிறகு அப்பகுதியிலுள்ள கஞ்சா வியாபாரிகள் 4 பேர் தலைமறைவானார்கள். அந்த 4 பேரையும் செல்போன் உதவியுடன் பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்தநிலையில் இரட்டைக்கொலை வழக்கில் தற்ே்பாது ஒருவர் சிக்கி உள்ளார். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்