சரக்கு வாகனம் மோதி ஒருவர் படுகாயம்
சரக்கு வாகனம் மோதி ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இலுப்பூர் சவுராஷ்டிரா தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 43). இவர் இலுப்பூர் தாலுகா அலுவலகம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக புதுக்கோட்டை கலிப் நகர் 1-ம் வீதியை சேர்ந்த அப்துல்லா என்பவர் ஓட்டி சென்ற சரக்கு வாகனம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சரவணனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.