பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தவர் கைது

பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தவர் கைது

Update: 2023-07-25 13:30 GMT

அனுப்பர்பாளையம்

திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் ஜோதிமணி. இவர் கடந்த மாதம் 15-ந் தேதி இரவு வெங்கமேடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆசாமி ஜோதிமணி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றார். இதுகுறித்து ஜோதிமணி கொடுத்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திருப்பூர் புதிய பஸ் நிலையத்தை அடுத்த சக்தி தியேட்டர் ரோட்டில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவரது பெயர் பாலாஜி (வயது 34) என்பதும், ஜோதிமணியிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட நபர் அவர்தான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பாலாஜியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 3 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்