ரூ.25 லட்சம் கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது
ரூ.25 லட்சம் கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
விக்கிரமசிங்கபுரம்:
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் போலீசார் கடந்த 15.11.2022-ந் தேதி வாகன சோதனை நடத்தினர். அப்போது மினி லாரியில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 100 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்து கடத்தி வந்த வழக்கில் ஏற்கனவே 5 பேரை கைது செய்துள்ளனர். இந்தநிலையில் விசாகப்பட்டினம் செட்டிபள்ளி கிராமத்தை சேர்ந்த ரமணா (வயது 35) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.