மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

மின்சாரம் தாக்கி ஒருவர் பலியானார்.;

Update:2022-07-18 01:01 IST

நெல்லை முன்னீர்பள்ளம் அருகே தருவை சாஸ்தா கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கிபாண்டி (வயது 57). இவர் தருவை குடிநீர் வடிகால் வாரியத்தில் தற்காலிக பம்பு ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இசக்கிபாண்டி தருவை தாமிரபரணி ஆற்றங்கரை பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்குள்ள ஒரு இரும்பு மின்கம்பத்தை தவறுதலாக தொட்டபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி இசக்கிபாண்டி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்