ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலி

கோவில்பட்டியில் ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலியானார்.

Update: 2023-03-15 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி திலகர் நகர் ரயில்வே தண்டவாளப் பகுதியில் ரெயிலில் அடிபட்டு 50 வயது ஆண் பிணமாக கிடப்பதாக, கிராம நிர்வாக அதிகாரி நாகலட்சுமி தூத்துக்குடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதை தொடர்ந்து ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகா கிருஷ்ணன், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர் பாலக்காடு- திருச்செந்தூர் செல்லும் ரயிலில் அடிபட்டு பலியானதாக கூறப்படுகிறது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை போலீசார் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தூத்துக்குடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்