வங்கியாளர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம்

சீர்காழியில் வங்கியாளர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2022-12-23 18:31 GMT

சீர்காழி:

சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் திட்ட மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வங்கியாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு மகளிர் திட்ட இயக்குனர் பழனி தலைமை தாங்கினார். முன்னோடி வங்கி மேலாளர் முத்துக்குமாரசாமி முன்னிலை வகித்தார். இதில் உதவி திட்ட அலுவலர்கள் செல்வகணபதி, குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இந்த முகாமில் பொது மேலாளர்கள், மாவட்ட தொழில் மைய மேலாளர், ஆதிதிராவிடர் நலத்துறை, பொதுத்துறை, தனியார்த்துறை, கூட்டுறவுத்துறை வங்கி மேலாளர்கள் மற்றும் கொள்ளிடம் வட்டார திட்ட பணியாளர்கள், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார இயக்க மேலாளர் மாதரசி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்