உதகையில் லாரி ஓட்டுனர்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம்

போராட்டம் காரணமாக 500-க்கும் மேற்பட்ட லாரிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-01-20 01:03 GMT

நீலகிரி,

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் லாரி ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் நீலகிரி மாவட்டம் உதகையில், இன்று காலை 6 மணி முதல் நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி வரை லாரி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இதற்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனிடையே போராட்டம் காரணமாக 500-க்கும் மேற்பட்ட லாரிகள் இயங்காது என்ற சூழலில், சுமார் ஆயிரம் டன் மலை காய்கறி ஏற்றுமதி பாதிக்கும் என்பதால் விவசாயிகள் காய்கறிகளை அறுவடை செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


Full View

Tags:    

மேலும் செய்திகள்