கொலை முயற்சி வழக்கில் ஒருவர் கைது
நெல்லை அருகே கொலை முயற்சி வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை அருகே உள்ள தாழையூத்தை சேர்ந்தவர் பொன் மணிகண்டன் (வயது 30). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சங்கரபாண்டி என்ற செல்லத்துரை (48) என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது.
நேற்று முன்தினம் தாழையூத்து உச்சிமாகாளி அம்மன் கோவில் அருகே பொன் மணிகண்டனின் தம்பியான கோமு பாண்டியனுக்கும், செல்லத்துரைக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் செல்லத்துரை, கோபு பாண்டியை அவதூறாக பேசி அரிவாளால் தாக்கி ரத்த காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இதுகுறித்து பொன்மணிகண்டன், தாழையூத்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப்பதிவு செய்து செல்லத்துரையை நேற்று கைது செய்தார்.