மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூரில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ராகாலயா நுண்கலை மன்றத்தின் சார்பாக அத்திப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதற்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர், துணைக்குழு உறுப்பினர், அரசு கல்வி நிறுவனங்களின் தலைவருமான நடேசன் தலைமை தாங்கினார்.
அரசு கல்வி நிறுவனங்களின் தாளாளர் கோதை நடேசன், அரசு கல்வி நிறுவனங்களின் செயலாளர் என்ஜினீயர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இசைக்குழுவினர் கேரள செண்டை மேளம் இசைக்க கல்லூரியின் அனைத்து மாணவிகளும், பேராசிரியர்களும் நடனம் ஆடி மகிழ்ந்தனர். பிற்பகலில் அனைத்து துறை சார்பாகவும், நுண்கலை மன்றம் சார்பாகவும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
அண்டை மாநிலத்தையும் நேசிக்கும் அன்பு குணம் கொண்டவர்கள் தமிழர்கள் என்பதை இந்த நிகழ்வின் மூலம் அரசு மகளிர் கல்வி நிறுவனத்தினர் தெரியப்படுத்தி உள்ளனர். இதில், அனைத்துத்துறை மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியி னை நுண்கலை மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர்கள், பேராசிரியர்கள் யோகப்பிரியா, சங்கீதா, கோபிகா, நந்தினி, மன்ற உறுப்பினர்கள், மாணவிகள் ஒருங்கிணைப்பு செய்தனர்.