கம்பத்தில் ஆரோக்கிய அன்னை தேர் பவனி

கம்பத்தில் திருவிழாவையொட்டி புனித ஆரோக்கிய அன்னை தேர் பவனி நடந்தது.

Update: 2022-09-09 15:54 GMT

 கம்பம் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் கடந்த 8 நாட்களாக திருவிழா நடந்து வந்தது. திருவிழாவில் தினந்தோறும் மாலையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் கம்பம், கூடலூர், ஆங்கூர்பாளையம், லோயர்கேம்ப், நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவின் இறுதி நாளான நேற்று புனித ஆரோக்கிய அன்னையின் தேர் பவனி நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஆரோக்கிய அன்னை வீதிகள் வழியாக உலா வந்தார். அப்போது கிறிஸ்தவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி சென்றனர். இதையடுத்து தேவாலயத்தில் நடந்த நன்றி திருப்பலியுடன் கொடியிறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்