கம்பத்தில்கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

கம்பத்தில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-27 18:45 GMT

கம்பம் மணிகட்டி ஆலமரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பிளாஸ்டிக் பையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து சோதனை நடத்தினர்.

அப்போது அவர்களிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கம்பம் கோம்பை ரோடு சாலை தெருவை சேர்ந்த முகிலன் (வயது 22), மணிகண்டன் (26) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகிலன், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்