பெண்ணை கொலை செய்த வழக்கில் கைதானவர் மீதுகுண்டர் சட்டம் பாய்ந்தது
ஓட்டப்பிடாரம் அருகே பெண்ணை கொலை செய்த வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ஓட்டப்பிடாரம் மேலமுடிமண் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மனைவி இந்திராணி (வயது 48). இவரை கடந்த 30.4.2023 அன்று கொலை செய்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற வழக்கில் ஓட்டப்பிடாரம் மேலமுடிமண் பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் ராமசாமி (43) என்பவரை ஓட்டப்பிடாரம் போலீசார் கைது செய்தனர். அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ராமசாமியை கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார்.