கோவில் திருவிழாவையொட்டிமாட்டு வண்டி பந்தயம்
கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
சாயல்குடி, கோவில் திருவிழாவையொட்டி
மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
சாயல்குடி அருகே கடுகு சந்தை, முத்துராமலிங்கபுரம், தேவர் நகர், சத்திரம், கிராம பொதுமக்கள் சார்பாக அழகு வள்ளி அம்மன் கோவில் முளைக்கொட்டு உற்சவ விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. சின்ன மாடு இரு பிரிவுகளாகவும், பூஞ்சிட்டு ஒரு பிரிவாகவும் பந்தயம் நடந்தது. சின்ன மாடு வண்டி பந்தயத்திற்கு 6 மைல் தூரமும், பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்திற்கு 5 மைல் தூரமும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
இந்த பந்தயத்தில் முதல் 3 இடங்களை பெற்ற மாட்டு வண்டி பந்தய வீரர்களுக்கு ரொக்கப்பணம் மற்றும் குத்துவிளக்கு பரிசாக வழங்கப்பட்டது. இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி பந்தய வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கடுகு சந்தை, முத்துராமலிங்கபுரம், தேவர் நகர், சத்திரம் கிராம பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.