தகவல் அறியும் உரிமை சட்ட வார விழாவையொட்டி மாணவ, மாணவிகள் பேரணி

தகவல் அறியும் உரிமை சட்ட வார விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

Update: 2023-10-11 18:45 GMT

ஆரணி

தகவல் அறியும் உரிமை சட்ட வார விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

தகவல் அறியும் உரிமை சட்ட வார விழாவை முன்னிட்டு ஆரணியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. தாலுகா அலுவலகத்தில் தொடங்கிய பேரணிக்கு ஆரணி வருவாய் கோட்டாட்சியர் எம்.தனலட்சுமி தலைமை தாங்கினார்.

தாசில்தார் ரா.மஞ்சுளா, வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல துணை தாசில்தார் சங்கீதா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் கலந்துகொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியில் ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சென்றனர். பேரணியானது கோட்டை தெரு, பழைய பஸ் நிலையம், காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு, கார்த்திகேயன் ரோடு, நகராட்சி சாலை வழியாக கோட்டை மைதானம், தாலுகா அலுவலகத்தில் நிறைவு பெற்றது.

இதில் ஆரணி நகராட்சி ஆணையாளர் கே.பி.குமரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், கிருஷ்ணமூர்த்தி, மகேந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் கிராம நிர்வாக அலுவலர் கண்ணதாசன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்