தொடர் விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்: நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்

தொடர் விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்து, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-09-17 18:45 GMT

திருச்செந்தூர்:

தொடர் விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

அலைமோதிய பக்தர்கள்

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

வாரவிடுமுறை மற்றும் இன்று (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி என்பதால் தொடர் விடுமுறையையொட்டி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

புதுமண ஜோடிகள்

அதிகாலை முதலே கோவிலில் குவிந்த வந்த பக்தர்கள், கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இலவச பொதுதரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசனத்தில் பல மணி நேரம் காத்திருந்து முருக பெருமானை வழிபட்டனர்.

நேற்று சுபமுகூர்த்த தினம் என்பதால் கோவில் வளாகத்தில் ஏராளமான ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இதனால் கோவில் வளாகத்தில் புதுமண தம்பதிகளாக காட்சியளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்