கூடலூர் சிவன்மலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம்

கூடலூர் சிவன்மலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2023-05-06 05:30 GMT

கூடலூர்

கூடலூர் சிவன்மலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சித்ரா பவுர்ணமி கிரிவலம்

கூடலூர் நம்பாலக்கோட்டை சிவன்மலையில் மாதந்தோறும் பவுர்ணமி திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சிவன் மலையை கிரிவலம் சென்று தரிசித்து வருகின்றனர். நேற்று சித்ரா பவுர்ணமியையொட்டி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

மதியம் 12 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு சிவன்மலை அடிவாரத்தில் உள்ள ஐஸ்வர்ய விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுவாமி சந்த் ஸ்ரீராஜகோபால் மகராஜ் தலைமையில் பக்தர்கள் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து பக்தர்கள் பக்தி கோஷமிட்டவாறு சிவன் மலையை கிரிவலம் வந்து தரிசித்தனர்.

மகாபிஷேகம்

பின்னர் மாலை 5.30 மணிக்கு சிவன்மலையில் உள்ள சிவலிங்கம், நந்தீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. அப்போது 108 மூலிகை அபிஷேகம் செய்யப்பட்டு மரிக்கொழுந்துகளால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் உலக மக்களின் நலன் வேண்டி சிவன்மலை படிக்கட்டுகளில் இருபுறமும் 1008 விளக்குகள் ஏற்றப்பட்டு கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது.

இதேபோல் சித்ரா பவுர்ணமியையொட்டி மேல் கூடலூர், பொக்காபுரம் மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு மகாதீபாரா தனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்