சுற்றுலாத்துறை சார்பில் தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனை கூட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும்போது, "தமிழக அரசு சுற்றுலாத் துறையின் மூலம் சுற்றுலா இடங்களை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனடிப்படையில் சுற்றுலா சார்ந்த தொழில் முனைவோர்கள், சுற்றுலாத்துறையின் இணையதளத்தில் பதிவு செய்யலாம். பதிவு செய்தபின்பு தொழில் முனைவோர்களுக்கான பதிவு சான்றிதழை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்" என்றார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) தாமரைக்கண்ணன், மாவட்ட சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) பாஸ்கரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.