கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்கள் சார்பில்மேதின விழா ஊர்வலம்

கோவில்பட்டியில் கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்கள் சார்பில் மேதின விழா ஊர்வலம் நடந்தது.

Update: 2023-05-02 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் ஏ.ஐ.டி.யு.சி, சி.ஐ.டி.யு ஆகிய தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின விழா ஊர்வலம் ராமசாமி தாஸ் பூங்கா முன்பிருந்து புறப்பட்டது. ஊர்வலத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் ஜி. பாபு, சி.ஐ.டி.யு, ஒருங்கிணைப்பாளர் ஏ சக்திவேல் முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஊர்வலம் மெயின் ரோடு வழியாக பயணியர் விடுதி முன்பு நிறைவடைந்தது.

இதனை தொடர்ந்து இனாம் மணியாச்சி சந்திப்பில் மே தின விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பேச்சிமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில் பஞ்சாலை தொழிற்சங்கம் குருசாமி, பிரான்சிஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர துணை செயலாளர் முனியசாமி, சி.ஐ.டி.யு, சிவகுமார், மாநில குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, மாநில துணை தலைவர் மகாலட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

Tags:    

மேலும் செய்திகள்