டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசு

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2023-09-25 18:45 GMT

கோவில்பட்டி (கிழக்கு):

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளை முன்னிட்டு, கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் தமிழ்நாடு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், இனிப்புகளும் வழங்கப்பட்டன.

அலங்கரிக்கப்பட்ட டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு தி.மு.க. சிறுபான்மையினர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் அமலி பிரகாஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நகர்மன்ற உறுப்பினர் ஜாஸ்மின் லூர்துமேரி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். நகர்மன்ற உறுப்பினர் லவராஜா அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்