பொள்ளாச்சி அருகே முறைகேடாக இயங்கி ஆம்னி பஸ் பறிமுதல்

பொள்ளாச்சி அருகே முறைகேடாக இயங்கி ஆம்னி பஸ் பறிமுதல்

Update: 2022-10-02 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதியிலிருந்து சென்னை, புதுச்சேரி, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, கோவில்பட்டி, நாசரேத், திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால், முக்கிய விஷேச நாட்களின்போது, பெரும்பாலான ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. இதில் நாளை (4-ந்தேதி) சரஸ்வதி பூஜை மற்றும் நாளை மறுநாள் விஜயதசமியையொட்டி சில ஆம்னி பஸ்களில் 3 மடங்கு கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவில், பொள்ளாச்சிவட்டார போக்குவத்து அலுவலர் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் சிலர், ஆம்னி பஸ் நிறுத்தும் பகுதியில் திடீர் என ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கூடுதல் கட்டணம் வசூல் குறித்து பயணிகளிடமும் விசாரித்தனர். மேலும், தொடர் விடுமுறையை பயன்படுத்தி புதுச்சேரிக்கு, ஒரே பதிவெண்ணில் 2 பஸ்கள் இயக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அரசுக்கு வரி இழப்பை ஏற்படுத்தியதாக, ஒரே பதிவெண் கொண்ட ஆமனி பஸ்சை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்,

Tags:    

மேலும் செய்திகள்