மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி
விளாத்திகுளம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலியானார்.;
எட்டயபுரம்:
விளாத்திகுளத்தை அடுத்த நாகலாபுரம் அருகே உள்ள கீழக்கல்லூரணி கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் மனைவி சித்தம்மாள் (வயது 70). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சித்தையன் (48) என்பவரது தோட்டத்துக்கு விவசாய பணிக்கு சென்றார். பின்னர் வேலை முடிந்து வீட்டுக்கு சித்தையனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். கீழக்கல்லூரணி விலக்கு அருகே சென்றபோது, சித்தம்மாளின் சேலை மோட்டார் சைக்கிளின் பின்சக்கரத்தில் சிக்கியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த சித்தம்மாள் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகலாபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சித்தம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சங்கரலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.