புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு

புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியானார்.

Update: 2023-10-11 19:33 GMT

புதுக்கடை,

புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியானார்.

 விபத்தில் சாவு

புதுக்கடை அருகே பைங்குளம் கணக்கப்பிள்ளை விளையை சேர்ந்தவர் தங்கப்பன். இவருடைய மனைவி பத்ரகாளி(வயது 80). இவர் நேற்று காலையில் கடைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து தேங்காப்பட்டணம்-புதுக்கடை சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் பத்ரகாளி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பத்ரகாளியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வெள்ளையம்பலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர், மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பத்ரகாளி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் தேங்காப்பட்டணம் பனங்கால்முக்கு பகுதியை சேர்ந்த பொன்னையன் என்பவரின் மகன் மனோகரன் மீது புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்