வீட்டின் மண் சுவர் இடிந்து மூதாட்டி சாவு

வீட்டின் மண் சுவர் இடிந்து மூதாட்டி உயிரிழந்தார்.

Update: 2022-11-16 18:45 GMT

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே உள்ள உரத்துப்பட்டியை சேர்ந்தவர் தேவி (வயது 75). இவருடைய கணவர் அழகு ஏற்கனவே இறந்து விட்ட நிலையில், 2 மகன் மற்றும் 3 மகள்கள் திருமணமாகி தனித்தனியே உள்ளனர். தேவி மட்டும் தனியாக வசித்து வந்தார். சமீபத்தில் பெய்த தொடர்மழையால் வீட்டின் மண் சுவர் நனைந்து சேதமான நிலையில் இருந்தது.

இந்நிலையில் நேற்று அவரது மண் சுவர் வெளிப்புறமாக திடீரென இடிந்து விழுந்தது. இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தனர். அப்போது மூதாட்டி தேவி இடிபாடுகளில் சிக்கி பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து உலகம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்