குளக்கரையில் மூதாட்டி பிணம்
குளக்கரையில் மூதாட்டி பிணம் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கறம்பக்குடி திருமணஞ்சேரி விலக்கு சாலை அருகே குமரகுளம் உள்ளது. இதில் தண்ணீர் இல்லை. இந்த குளத்தின் கரையில் நேற்று காலை மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக கறம்பக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு சென்ற போலீசார் மூதாட்டி யார்? என விசாரணை நடத்தினர். இதில் அவர் கறம்பக்குடி வடக்குதெருவை சேர்ந்த வீராச்சாமி மனைவி பெரியாத்தா (வயது 72) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் வழக்குப்பதிவு செய்து மூதாட்டி எதற்காக இப்பகுதிக்கு வந்தார், எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.