மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை
பந்தலூர் அருகே மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகா பாட்டவயல் அருகே கொட்டாடு மாங்காசால் பகுதியை சேர்ந்தவர் பொன்னையா. இவரது மனைவி ராமாய் (வயது 62). இந்தநிலையில் நேற்று முன்தினம் ராமாய் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அம்பலமூலா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மூதாட்டி தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.