மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
போடி அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.;
போடி சுப்புராஜ்நகர், புதுகாலனி ஜெயம் நகரை சேர்ந்த பழனியப்பன் மனைவி இந்திராணி (வயது 75). இவர் தனது மகன் சுந்தரேசனுடன் (47) வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கியபிறகு, இந்திராணி உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதற்கிடையே நேற்று அதிகாலையில் எழுந்த சுந்தரேசன், தனது தாய் தீயில் கருகி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து அவர் போடி டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, இந்திராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சுந்தரேசன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.