பழமையான மரம் வெட்டி அகற்றம்

பழமையான மரம் வெட்டி அகற்றப்பட்டது.

Update: 2022-08-22 17:54 GMT

புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி செல்லும் சாலையில் வலதுபுறத்தில் சிறைத்துறையினரால் நிர்வகிக்கப்படும் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி அந்த பகுதியில் உள்ள பழமையான மரங்களில் ஒன்றினை சம்பந்தப்பட்ட துறையினர் வெட்டி அகற்றினர். மேலும் அதனை வேரோடு பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். மரம் வெட்டி அகற்றப்படுவதை கண்ட பொதுமக்கள், மரம் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் கடும் வேதனை அடைந்தனர். இன்றைய காலக்கட்டத்தில் மரம் வளர்ப்பதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிற நிலையில் பழமையான மரம் அகற்றப்பட்டதை எண்ணி கவலைஅடைந்தனர். மரம் வெட்டி அகற்றப்பட்டதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்