மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் படுகாயம்

ஸ்பிக்நகரில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-07-02 18:45 GMT

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு நடுத்தெருவை சேர்ந்தவர் குமாரவேல் (வயது 61). கூலி தொழிலாளி. இவர் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் ஸ்பிக் நகர் பகுதியில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர்் மீது மோதியது. இதில் படு காயம் அடைந்த குமாரவேலை அந்தப் பகுதியில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மகாராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்